Friday, April 17, 2009

உஷ்ணம் அதிகரிக்கிறது : என்ன செய்ய போகிறீர்கள்?

WHITLEY1    உஸ்! அப்பாடா! என்ன வெயில்  என்ன வெயில்.

கோடைகாலம்   தொடங்கியவுடனே நாமெல்லாம் முணுமுணுக்கும் வார்தைகள் இவை.

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்ப நிலை 0.5 செல்சி  முதல் 1 செல்சி வரை உயர்ந்து வருவதாக

அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து பூமியை சூழ்ந்துவிடும்.Iceberg

நாம் இன்று பார்க்க கூடிய பல நிலப்பரப்புகள் ஒரு நூற்றாண்டிற்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது. வட துருவம், தென்துருவம் இரண்டும் பனிபடர்ந்து உலகின் வெப்பநிலையை சமப்படுத்தி வருகிறது. இதுவும் புவியின் வெப்பநிலை உயர்வு  காரணமாக உருகிவருகிறது. உருகிய நீரானது கடலுக்குள் சென்று கடலின் நீர்மட்டம்  உயருகிறது. இது மட்டுமில்லாது பெங்குயின் என்ற பறவைஇனம் பனி இல்லாததன் காரணமாக அழிந்து விடகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் தடுக்கவே முடியாதா?

ஏன் முடியாது நம்மால் நினைத்தால் கண்டிப்பாக முடியும்.

பண்டித ஜவகர்லால் நேரு ஒருமுறை சொன்னார்249039

 ”நீ இந்த பூமியில் பிறந்து மறையும் முன்பு எத்தகைய சாதனைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் குறைந்த்பட்சம் இரண்டு மரக்கன்றுகளையாவது  நட்டு பராமரித்து வந்தால் அதுவே நீ இந்த மனித குலத்திற்கு  செய்யும் மகத்தான சாதனை “

நிறைய மரங்கள் இருந்தால் நிழல் மட்டுமல்ல  பூமியும் குளிர்ந்து  நிறைய மழை பெய்யும். அடர்த்தியான  மரங்கள் இருந்தால் அதன் சுற்றுப்புறம் உஷ்ணம் குறைந்திருக்கும் ஈரம் அதிகமிருக்கும். இது வளிமண்டலத்தில்  காற்றோட்டதை பாதித்து ஆவியாகிவிட்ட நீரைமறுபடியும் நீர்துளியாக்கி மழை பெய்ய உதவும். மழை நிறைய பெய்தால் மரங்கள் நிறைய; மரங்கள் நிறைய இருந்தால் மழைபெய்ய; இது ஒரு குட்டிச்சக்கரம்

Autumn

உங்கள் வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் மிச்சமிருக்கும்  இடங்களிலும் உங்களுக்கு பிடித்த, பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு  மரக்கன்றுகளை பரிசாக கொடுங்கள்.

145079

    மரம் வளர்ப்போம்!           மழைபெறுவோம்!!

              மாசற்ற பூமி செய்வோம்!!!

 

2 comments:

MCX Gold Silver said...

நல்ல சமூக கருத்து.அருமையாக விளக்கியுள்ளீர்கள்.எங்க சார் நீண்ட நாட்களாக காணோம்.இந்த மாதிறி அடிக்கடி பயனுள்ள பதிவா போடுங்க

நன்றி

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வாங்க கோவிந்த்:)
தங்கள் வருகைக்கு :)
நன்றி