Monday, October 27, 2008

வணக்கம் தீபாவளி தெரியும் இந்த செய்தி தெரியுமா?!


வணக்கம்


அன்பார்ந்த தமிழ் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

புத்தாடை,மத்தாப்பு,தித்திப்புடன் உற்றாரும் உறவினரும் ஒன்றுகூடி தீபாவளியை மகிழ்ந்துடுவோம்.

தீபாவளி தெரியும் இந்த செய்தி தெரியுமா?!

1.சோழர் காலம்வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை!

2.1944,1952,1990 ஆகிய வருடங்களில் புரட்டாசியிலே (31ம் தேதி) தீபாவளி வந்தது!

3.தீபாவளியன்று ஒரு துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டுக்கு வெளியே போட்டால் மூதேவி ஓடிவிடும்

என்பது பீகார் மாநிலத்தில் ஒரு நம்பிக்கை!

4.1946ம் வருடத்திலிருந்து தான் சிவகாசியில் கேப் வெடிகள் தயரிக்கப்படுகின்றன.!

5.சங்க காலம் முதல் பாரதி காலம் வரை தீபாவளி பற்றிய பாடல்கள் எதுவும் இல்லை!!!

6.தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் பேர் வசிப்பதால் அங்கு தீபாவளி ஒரு தேசிய பண்டிகையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது!!!!

7.சமண மதத்தின் புது வருடம் தொடங்குவது தீபாவளி திருநாளில் தான். மகாவீரர் இந்த நாளில் தான் முக்தியடைந்தார்!

8.ஷ்கந்த புராணத்தின்படி பார்வதி தவம் பூர்த்தி செய்த நாள் தீபாவளியன்று தான். அதனால் தான் தன் உடலில் பாதியை கொடுத்து அர்த்தநாரீஷ்வரர் ஆனர் சிவன்.!!

9.குருஹர்கோவிந்த் சிங், ஜஹாங்கீரின் சிறையிலிருந்து திரும்பி வந்தது தீபாவளி திருநாளில் தான்,

அதனால் புனிதமானதாக இந்த தினத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்!!

10. நரகாசூரன் ஆண்ட நகரம் எங்கே இருக்கிறது தெரியுமா?

பிரயாகியோடிஷ்ஹபுர என்ற பெயருள்ள அந்த நகரம்

இன்றைய அசாம் (ASSAM) தான்!!!!!!!!