Monday, June 14, 2010

சம இரவு நாள்

image

 

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ எனபது சமம்  என்றும் நாக்சு என்பது இரவு என்றும் பொருள்படும்.
சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.
நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது.
புவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன. பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

 

நன்றி - தினகரன்

Wednesday, May 5, 2010

யானையின் உச்சி முதல் பாதம் வரை

 image image

யானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால் கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், 'மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங் கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை.

'பேச்சலர்' யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட 'பேச்சலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப் புடன் வளர்க்கக்கூடியவை.

அடுத்த 'சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு 'பதவிக்கு' வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை 'மக்னா' என்கின் றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், 'வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

தொடர்பு கொள்வதில்கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும்திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது 'கிரீச்... கிரீச்...' என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை 'வாசம்' பிடிக்கும்.

தோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.

காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் 'டென்ஷன்' ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் 'எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.

தும்பிக்கையே நம்பிக்கை: வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துதிக்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.

காதை ஆட்டுவதன் ரகசியம்: யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங் களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும்.இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.

தவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.

மதம் மூன்று மாதம்: ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே 'ஹனிமூன்' செல்லும்.

அங்குசம் தேவையா? பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.

பாலித்தீனால் பலியாகும் யானை: பரவலான மலைப்பகுதிகள் இல் லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.

அதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.

யானையை பாதுகாப்பது முக்கியம்: யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.

யானைகளின் பரிணாம வளர்ச்சி:குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.

பல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.

ஆசியா யானைகளின் மொத்த எண்ணிக்கை:50,000 இந்தியா:27,500 - 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்:3500 - 4000

இரட்டையர்களும் உண்டு:யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில் 'மேஜராகி' விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிப் போடும்.தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18-22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90-125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்.

ஆப்ரிக்கா, ஆசியா யானைகள் ஒப்பீடு:உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.

ஆசியா யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும்.ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.

( நன்றி - தினமலர்)

Tuesday, April 27, 2010

அழகரின்அபூர்வ வரலாறு

image

ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது.

அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ''வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்.

தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் 'அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர்கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.

கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது : அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் 'கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், 'வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.

தேனூர் மண்டபத்தில் நடந்த விழா : மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார்.

வைகை தோன்றியது எப்படி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். ''தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ''இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார். விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.''மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், '' மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது.  உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், '' நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே 'வைகை' ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் 'வேகவதி' எனப்பட்டது.வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.

அழகர்கோவிலின் சிறப்பம்சம் :கருப்பண்ணசுவாமி: இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார்.இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும்.

கோட்டை: விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

அழகர் கோயில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.

நூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது
* மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை.
* பெருமாள் சப்தரி ஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
* 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்
* சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
* மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.

மண்டூக முனிவருக்கு விமோசனம் தந்த விழா : முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், ''மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போது அழகர்கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ராபவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார்.

நேர்த்திக்கடன் : தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம்

செய்யலாம்.

( நன்றி - தினமலர்)

Tuesday, February 2, 2010

அனகோண்டா

டால்பின்-பிஷிங் -கிட்ஸ்

பீவர்-கிட்ஸ்

நரி

எரிமலை

தவழை -ச்ற்றவ்பெர்ரி

ஆஸ்திரேலியா-மலை வரைவுகள்

மின்னல்

ஓனான்

விண்வெளி

நத்தை

கடல் நண்டு

ப்லான்க்ட்டன்ஜெல்லி

கிளௌன்பிஷ்

கடல் மீன்கள்

கடல் மீன்கள்

க்ரில்

Monday, February 1, 2010

வெள்ளாடு

நாய் சாதனை

பெண்குயேன்

நீல கால் நாரை

ரேபெளிகிங் பாம்பு

ரீங்கார பறவை

கிளி

பஞ்சவர்ணம் கிளி

காதல் பறவை

மயில்

நீலபறவை