Thursday, April 30, 2009

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா ஸ்பெஷல்

tblfpnnews_55750238896 ஐந்தாம் திருநாள் கொண்டாட்டம்: இன்று சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள். மதுரையின் தாய் மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர்.

இன்றைய தினம் அவர்களிடம் நமது வேண்டுகோள் என்னவாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள் வோம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் மனிதனை ஆட்டுவிக்கின் றன. அதாவது, உடல் இன்பத்தை தேடி அலைகிறது. வாய் என்னென் னவோ பேசுகிறது, எதை எதையோ சாப்பிடுகிறது. கண்கள் பார்க்கக் கூடாத அனைத்தையும் பார்க்கிறது. மூக்கு தேவையற்ற வாசனைகளை நுகரத்துடிக்கிறது. செவி கண்ட கண்ட இசையையும், தேவையற்ற பேச்சுகளையும் கேட்கிறது. இந்த புலன்களெல்லாம் தவறான பாதையில் செல்வதால், மனம் அலைபாய்கிறது. எனவே, நமது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என மீனாட்சி தாயிடம் கேட்க வேண்டும்.

""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காலா மணிவிளக்கே'' என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார். "" நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும்போது, அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி, மனிதன் ஒளிவிளக்காக திகழ்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலிங்கமாகி விடுகிறது,''என்பது இந்தப் பாடலின் பொருள்.

இதை சூசகமாகக் காட்டத்தான் மற்ற நாட்களில் வெவ்வேறு வாகனங்களில் வரும் சுவாமியும், அம்பாளும் இன்று குதிரை வாகனத்தில் வருகின்றனர். (ஒரே வாகன சிறப்பு ரிஷபத்துக்கும் உண்டு) குதிரையை அடக்க கடிவாளம் இருப் பது போல, உங்கள் மனங்களையும் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்துங்கள் என்று அவர்கள் இந்த வாகனத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். நமக்கு இறைவனால் தரப்பட்ட உறுப்புகள் நல்லதை மட்டுமே செய்ய சுவாமியிடமும், அம்பாளிடமும் வரம் வேண்டுவோம்.

(நன்றி - தினமலர்)

No comments: