Saturday, June 20, 2009

இன்று தந்தையர் தினம்

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறந்த தந்தையரை பெருமைபடுத்தும் விதமாகவும், நன்றி கூறும் விதமாகவும் 1910ம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பாசத்துக்கு எப்போதும் தாய்தான் உதாரணம். ஆனால் குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்கு முக்கியமானது. தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலும் குடும்ப பொருளாதாரம் தந்தையை சார்ந்தே உள்ளது.

இந்தியா முழுவதும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் தந்தை குடித்துவிட்டு தகராறு செய்வதால் மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ளனர். தந்தையையே குழந்தைகள் முன்மாதிரியாக கொள்கின்றனர். குடும்பத் தலைவரிடம் காணப்படும் ஒழுக்க குறைபாடு குழந்தைகளையே கடுமையாக பாதிக்கிறது. தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இந்த தினத்தை தந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவிலும் தந்தையர் தினம் பிரபலமடைந்து வருகிறது. பெருநகரங்களில் தந்தையர் தினத்தை பற்றிய விழிப்புணர்வு காணப்படுகிறது. சில பள்ளிகள் தந்தையர் தினத்தின் போது குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. சிறிய வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டுமென ஊக்குவிக்கப்படுகின்றனர்.

(நன்றி - தினமலர்)

2 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு முருகன்!!

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வாங்க ஜீவன் வணக்கம்:)

தங்கள் வருகைக்கு :)
நன்றி
:)