அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதால்,
பூமியில் தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு, என பெங்களூரை சேர்ந்த தம்பதியர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி, சந்திரகிரகணமும், 22ம்தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மீண்டும் ஒரு சந்திரகிரகணமும் தொடர்ந்து வருகின்றன. இந்த நூற்றாண்டில், மிக நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய சூரிய கிரகணம் 22ம் தேதி வானில் காணப்படுகிறது.
மூன்று கிரகணங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்ட சமயங்களில் பூமியில் பல கெட்ட நிகழ்வுகள் ஏற்பட்டதாக பெங்களூரை சேர்ந்த ஹரி-ஹேமா தம்பதியர் தாங்கள் எழுதிய "வரலாறு திரும்புமா?' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். புராண காலத்தில் இதே போல மூன்று கிரகணங்கள் தோன்றிய போது மகாபாரத போர் ஏற்பட்டதாம். அதன் பின் ஏற்பட்ட தொடர் கிரகணங்களின் போது கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் மூழ்கியதாம்.
கடந்த 1910 மற்றும் 1945 ஆகிய கால கட்டங்களில் மூன்று கிரகணங்கள் ஏற்பட்ட போது முதல் மற்றும் இரண்டாம் உலக போர் ஏற்பட்டதாம். இந்த கால கட்டத்தில் தான், ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. வரும் 2020ம் ஆண்டு, காலத்திற்குள் ஆறு முறை, தொடர்ந்து மூன்று கிரகண நிகழ்வுகள் ஏற்பட உள்ளன. எனவே, இந்த காலகட்டத்தில் பல்வேறு தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளன, என இந்த தம்பதியர் தங்களது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களே, 23.12.2012 அன்று உலகம் அழியபோவதாக பல அறிவியல் & மேலை நாட்டுஜோதிட வல்லுனர்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளனர்.அதை மெய்பிக்கும்வகையில் இவர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மாயன் என்ற வரலாற்று காலண்டேரில் 21.12.2012 -க்கு பிறகு நாட்களை குறிக்கும் குறியீடுகளே இல்லையாம் மற்றும் GMT (Goodman-Martinez-Thompson) வகை கால குறிப்பேடிலும் 23.12.2012 -க்கு பிறகு நாட்கள் இல்லையாம். GMT என்பது தற்போதும் நம்மால் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி மேலும் அறிய www.survive2012.com என்ற இணையத்தில் காணவும். பல்வேறு சாத்தியகூறுகள் & விளக்கங்கள் அதில் உள்ளன. தற்போது இதைப்பற்றி ஒரு ஆங்கில படமே தயார் ஆகிவருவது உங்களுக்கு தெரியுமா?? அந்த படத்தின் பெயரும் 2012 தான்.அது வரும் செப்டெம்பரில் உலகெங்கும் திரைக்கு வருகிறது.சமீபத்தில் தான் அதன் ட்ரைலர் வெளியிடப்பட்டது. நீங்கள் அதை youtube -இல் ''2012 full trailer '' என்று டைப் செய்து சர்ச் செய்து பார்க்கவும். மிகவும் முக்கியமானது.ஆக, இந்த ட்ரைலர் மற்றும் அந்த இணையம் இரண்டையும் பார்க்கவும்
by mr Alanraj,United Arab Emirates
(நன்றி - தினமலர்)
No comments:
Post a Comment