Friday, April 17, 2009

பொருளாதார நெருக்கடி: வெங்காயமா? வேர்கடலையா?

அதென்ன  வெங்காயமா ? வேர்கடலையா ?

தற்பொழுது உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெங்காயம் போல் இருந்து நமக்கு கண்ணீர் வரவழைத்துவிட்டு பின்பு ஒன்றுமில்லாமல் மறைந்துவிடுவதா? அல்லது உள்ளே விஷயம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டும் வேர்கடலையைப் போன்ற திடமானதா ?என்பதற்குதான்  இந்த தலைப்பு.

ஷ்ஷப்பா...... ஒரு தலைப்புக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையா ?

வடிவேலு பாணியில் சொன்னால் ”இப்பவே கண்ணகட்டுதே “ !  சரி விஷயத்திற்கு வருவோம்.

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு

இது தான் முதல் தடவையென்றோ, இது தான்

அதிகவீரியம் கொண்டதென்றோ நாம் நினைத்தால் அது தவறு. ஏற்கனவே நாம் பாகிஸ்தனுடன் போரிட்ட 1960 களிலும், ஏன் 1990 களிலும் கூட பொருளாதார நெருக்கடி நம் நாட்டை வெகுவாக பாதித்துள்ளது.

அப்போதெல்லாம்  செய்திபரப்ப இது போன்ற 24 மணிநேர ஊடகங்கள் இல்லை. விளைவுகளும் பெரிதாக உணரப்படவில்லை.

என்ன, தற்பொழுது ஊடகங்கள் உலக நிகழ்வுகளை விளக்குவதால் சாதாரண  செய்தி கூட பூதகாரமாகத் தோன்றுகிறது. மற்றபடி வல்லுநர்களைப் பொருத்தவரையில் இந்த நெருக்கடி பத்தோடு ஒன்று பதினொன்று வகையறா தான்.

அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளையும் அங்கு துவங்கிய சரிவு பற்றியும்  ஏற்கனவே நிறைய பேசி எழுதியாகிவிட்டதால் அது நமக்கு வேண்டாம்.

நமது நாட்டின் தொழில் வளர்சியின் நிலைபாடு  என்ன?

அது எந்த அளவிற்கு நம் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு உதவும்   என்பது தான் முக்கியம்.

நமது நாட்டில் உற்ப்பத்தி நிறுவனங்களை பொருத்தமட்டில் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கமும் பல்வேறு வகையான சலுகைகளையும் வரிகுறைப்பு வாயிலாக செயல்படுத்தியுள்ளது. ஆனாலும் நிலைமை  சீரடைய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.

2007ம் ஆண்டு நமது நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி 10.9% ஆக இருந்தது அது படிபடியாக குறைந்து தற்போது 1.1% ஆக உள்ளது.

மற்ற நாடுகளைக் கணக்கெடுக்கையில்  நமது நாட்டில்  தொழில்துறையின் வளர்ச்சி  இன்னும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் பாதகமில்லை. ஆனலும் , இந்த மந்த நிலை நிரந்தரமுமில்லை.

சமீபத்தில், ஒரு பொருளாதார நிபுணர் சொன்ன கருத்து

மிகவும் வியப்பாக இருக்கிறது அதாவது பணவீக்கம் என்பது நமக்கு பிடிக்கும் ஜலதோசம் போன்றது. வரும் பின்பு தானே சரியாகிவிடும் !

பணவீக்க சதவீத புள்ளி விபரமும் அது போல  ஏறும் இறங்கும். பின்பு தானே சீரடைந்து விடும்.

அதை கண்டுகொள்ளாமல்  விடுவதே உத்தமம்.

இதே முறையே, சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கும் கடைபிடிக்கலாம்! நிலைமையை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கவனித்துக்கொள்ளும்.

இனி இந்த பிரச்சனையை வெங்காயமா ?  வேர்கடலையா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

 

 

       நன்றி : www.rediffmail.com 

Tuesday, March 31, 2009

புதுக்கணக்கு துவங்கும் நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரம்




அன்னை மீனாட்சியையும், உலக நாயகர் சுந்தரேஸ்வரரையும் கும்பாபிஷேகத்தை ஒட்டி மனமுருகி பிரார்த்திக்க, பதஞ்சலி மகரிஷி அருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திரத்தின் பொருளை கூட்டாக அமர்ந்து, ஒருவர் வாசிக்க மற்றவர்கள் இதைச் சொன்னால் நம் வீட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்கும், செல்வச் செழிப்பு ஏற்படும், நிம்மதி பிறக்கும். அது மட்டுமல்ல! இன்று புதுக்கணக்கு துவங்கும் வேளையில், இதை பாராயணம் செய்யும் வியாபாரிகள் நிறைந்த லாபம் அடைவார்கள்.

1. பொற்றாமரை குளக்கரையில் வசிப்பவரும், கருட வாகனத்தில் வரும் விஷ்ணுவுக்கு பிரியமானவரும், கோடி சூரியப்பிரகாசம் கொண்டவரும், மீனாட்சிஅம்மையோடு விளையாடல் புரிபவரும், நாகாபரணம் அணிந்தவரும், எப்போதும் மங்களத்தை தருபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்

.2. தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கையையும், பிறைச்சந்திரனையும் தலையில் கொண்டவரும், சூரியன், சந்திரன், அக்னி என்னும் மூன்று கண்களை உடையவரும், சர்ப்பங்களை குண்டலங்களாக அணிந்தவரும், புண்ணியாத் மாக்களின் பந்துவாக இருப்பவருமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

3. நான்முகனாகிய பிரம்ம தேவர் அருளிய நான்கு வேதங்களால் துதிக்கப்படுபவரும், மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதிதேவியை இடப்பாகத்தில் உடையவரும், புருஷார்த்தங்களை கொடுப்பவரும், மிக அழகுற தாண்டவம் ஆடுபவரும் மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்

4. இலையுதிர்கால சந்திரனைப் போல அழகான பவள நிறம் கொண்ட கீழ் உதட்டோடு பிரகாசிக்கின்ற முகமண்டலத்தை கொண்டவரும், கையில் இருக்கும் கபாலத்தில் உள்ள ரத்தத்தைப் புசிப்பவரும், மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

5. மகா விஷ்ணு ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்த போது, ஒரு மலர் குறைந்ததால் தன் தாமரை போன்ற கண்களையே பூவாக அர்ச்சிக்க ஆயிரம் சூரிய மண்டலம் போல பிரகாசிக்கும் சக்கரத்தை கொடுத்தவரும், மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

6.பூமியைத் தேராகவும், மகாவிஷ்ணுவை அம்பாகவும், மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், பிரம்மனை சாரதியாவும், நான்கு வேதங்களைக் குதிரையாகவும் கொண்டு விளங்குபவரும், மங்களத்தின் இருப்பிடமுமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

7. தட்ச யாகத்திற்கு வந்த பாதாளவாசிகள், சொர்க்கவாசிகள், மிகப்பெரிய உடலைக் கொண்ட வீரபத்திரரின் சிங்கத்திற்கு ஒப்பான கர்ஜனையைக் கேட்டு பயந்தனர். பயந்தவர்களுக்கு அபயம் அளித்து காப்பாற்றுபவரும், அப்போது சப்தம் எழுப்பிய சப்த பிரபஞ்சங்களுக்கும் சாட்சியாய் இருப்பவருமான மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

8. மார்க்கண்டேயரைக் காப்பதற்காக எமதர்மனை வெறுத்தவரும், சந்திரனே தோல்விஅடையும் விதத்தில் அழகான கன்னங்களைக் கொண்டவரும், வேண்டுபவர்களுக்கு இகபர சுகசவுபாக்கியங்களை தருபவரும், மங்களத்தின் இருப்பிடமும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

9. மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் நியமத்துடன் பூஜிக்கப்பட்ட திருப்பாத கமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும், வெள்ளியம்பலத்திற்கு அதிபதியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

10. ஹாலாஸ்ய �க்ஷத்திரமான மதுரை நாயகரும், மகேஸ்வரரும், ஆலகாலம் என்னும் விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், ஸ்ரீ மீனாட்சியம்மையின் பதியானவரும், அழகிய தாண்டவத்தை உடைய மங்கள மூர்த்தியுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

குறிப்பு: இந்த ஸ்தோத்திரத்தின் முடிவில் சொல்லப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ பதஞ்சலியால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் எவர் படிக்கிறாரோ அவருக்கு நீண்டஆயுள், ஆரோக்கியம், செல்வம் இவைகளை நான்(சிவபெருமான்) கொடுக்கிறேன்.

(நன்றி- தினமலர்)