சூரியபகவான்
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !
அருள் பொங்கும் முகத்தைகாட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி !!
தாயினும் தனிந்துச்சால சகலரையும் அணைப்பாய் போற்றி !!!
தழைக்கும்மோற் உயிற்கட்கெல்லாம் துணைகரம் கொடுப்பாய் போற்றி !
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி !!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி !
ஞயிரே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !!
நாநிலம் உலநாள் மட்டும் போற்று போற்றி போற்றி !!!
ஆதவனே !
கண்ணுக்கு தெரிந்த கடவுளே,எந்த வேறுபாடும் இன்றி உலகவாழுயிர்கள் அணைத்திற்கும் அருள் புரியும் அப்பனே,
உன்னை வேண்டுகிறேன் எல்லா நலமும் எய்து வாழ்வில் என்றும் வெற்றிபெற எமக்கு ஒளி காட்டவேண்டும் !
------------------------------------------------------------------------------------
நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய தித்திக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்